சண்டிகார்: பாலிவுட் படங்களில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன், என்று நடிகை நீரு பாஜ்வா குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் நடிக்க பலருடன் படுக்க கூப்பிடுகிறார்கள்! முன்னணி நடிகைக்கு விபரீத அனுபவம்!

கடந்த 1998ம் ஆண்டு தேவ் ஆனந்தின் மெய்ன் சோலா பராஸ் கி என்ற படத்தின் மூலமாக, நடிகையாக அறிமுகம் ஆனவர் நீரு பாஜ்வா. பாலிவுட் மட்டுமின்றி, பஞ்சாப் சினிமாத் துறையிலும், முன்னணி நடிகையாக நீரு பாஜ்வா வளர்ச்சியடைந்தார்.
ஆனால், திடீரென சமீப காலமாக, அவர் பாலிவுட் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பஞ்சாப் மொழி படங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கான காரணம் பற்றி அவரே சமீபத்தில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு முறை பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானபோது, இந்த படத்தில் நடிக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட சில நபர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சொல்வதை மட்டும் செய்தால்தான் வாய்ப்பு என்றும் படக்குழுவினர் கூறினார்களாம்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த நீரு பாஜ்வா, பாலிவுட் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பஞ்சாப் மொழிப் படங்களிலும் மட்டும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன் என்று, ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
மேலும், ''ஒட்டுமொத்த பாலிவுட் உலகமே இப்படித்தான் செயல்படுகிறது என்று நான் சொல்லவில்லை. சில தவிர்க்க முடியாத நபர்கள் பாலிவுட்டில் இப்படி செயல்படுகிறார்கள் என்றுதான் சொல்கிறேன்,'' என்றும் நீரு பாஜ்வா குறிப்பிட்டுள்ளார்.