ராதாரவி படுக்கைக்கு அழைத்த விவகாரம்! நடிகர் விஷாலை ஒரு பிடி பிடித்த நயன்தாரா!

ராதாரவி தன்னை ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலை நயன்தாரா கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார்.


இது தொடர்பாக நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலில் ராதாரவியின் பெண் வெறுப்பு பேச்சுக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ராதாரவி மற்றும் அவரை போன்ற பெண் வெறுப்பாளர்களும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற ''வலுவான ஆண் பெருமை'' கொண்டவர்களின் குடும்பங்களில் வாழும் பெண்களுக்கு எனது பச்சாதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ராதாரவி மாதிரியான ஆட்கள் தொழிலில் வீழ்ச்சியை சந்தித்த பிறகு இது போன்ற மலிவான உத்திகளை கையாண்டு வெளிச்சம் பெற முயல்கிறார்கள்.ராதாரவியின் இது போன்ற நடத்தைகளை எனது அன்புக்குரிய ரசிகர்களும் நல்ல எண்ணம் கொண்ட பொதுமக்களும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விஷாகா குழு அமைத்து அதற்கு உறுப்பினர்களை நியமித்து நியாயமாக விசாரணை நடத்தப்போகிறதா? இல்லையா? என்று கோபத்துடன் நயன்தாரா கேட்டுக் கொண்டுள்ளார்.

ராதாரவி மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுத்த விஷாலுக்கு நயன்தாரா இப்படி ஒரு கேள்வி கேட்டிருப்பது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விஷாகா கமிட்டி அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட நடிகைகள் வரிசையாக புகார் அளிக்க வாய்ப்பு உள்ளது.