ஒரு நாளைக்கு எவ்வளவு? ரேட் குறித்து வெளிப்படையாக பேசிய பிக்பாஸ் மீரா மிதுன்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக தன்னிடம் பேசப்பட்ட ரேட்டை வெளிப்படையாக கூற முடியாது என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.


சென்னையில் இன்று மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அட்வான்ஸ் கூட வாங்காமல் கலந்து கொண்டேன். சுமார் 30 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதாவது பிக்பாஸ் வீட்டில் 30 நாட்கள் இருந்தேன்.  

அதன் பிறகு பிக்பாஸ் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் 5 நாட்கள் பங்கேற்றேன். ஆனால் தற்போது வரை எனக்கு பேசியபடி சம்பளம் தரவில்லை. நானும் அவர்களாக அழைத்து தருவார்கள் என்று காத்திருந்தேன். ஆனால் அவர்கள் என்னை அழைக்கவில்லை.

இதனிடையே நான் விஜய் டிவியை தொடர்பு கொண்டு சம்பளத்தை கேட்டேன். அவர்கள் அதற்கு முறையாக பதில் தரவில்லை. இதை என்னால் ஏற்க முடியவில்லை. அட்வான்ஸ் கூட வாங்காமல் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற எனக்கு பேசியபடி சம்பளத்தை தர வேண்டும்.

இல்லை என்றால் விஜய் டிவி மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் எவ்வளவு சம்பள பாக்கி என்று கேட்டனர். அதற்கு ஒரு நாளைக்கு இவ்வளவு என்று ரேட் பேசினார்கள் என்றார். அது தான் எவ்வளவு என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ரேட் என்பதை நான் வெளியே கூற முடியாது. பிறகு என்னுடைய மார்க்கெட் நிலவரம் தெரிந்துவிடும். இவ்வாறு மீரா கூறினார்.