திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் நான் அப்படிப்பட்ட விஷயத்தை செய்வது எனது மகளுக்கு பிடிக்காமல் போய்விட்டதாக நடிகை மீனா வருத்தத்துடன் தெரிவித்தார்.
நான் செய்த அந்த விஷயம் என் மகளுக்கு பிடிக்கவில்லை..! வெளிப்படையாக மீனா கூறிய தகவல்!

1990களில் தமிழ்த் திரையுலகில் வலம் வந்த கதாநாயகிகளுள் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்களுள் நடிகை மீனாவும் ஒருவர். ரஜினிகாந்த்தி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அவருடைய குழந்தையே திரையுலகில் வீறு நடை போட்டு வருகிறது.
தற்போது விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் கரோலின் காமாட்சி என்ற இணைய தொடரில் சிபிஐ ஆபிசராக நடித்து வருகிறார் மீனா. இவர் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சினிமாவில் இருக்கும்போது நிறைய டிவி தொடர் வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் அங்கே செல்லவேண்டாம் என பலர் அறிவுரை கூறினர்.
ஆனாலும் என் விருப்பப்படி துணிந்து நடித்தேன். இப்போது இணைய தொடர்கள் பிரபலமாகி வருவதால் அதிலும் நடிக்கத் தொடங்கி உள்ளேன். மேலும் சிபிஐ ஆபிசர் கதாபாத்திரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் என்னை படங்களில் காப்பாற்றுவார்கள்.
இதில் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. எனவே சண்டையிடுகிறேன். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நான் தலைமுடியை வெட்டி பாப் கட் செய்துள்ளேன். அது என் மகள் நைனிகாவுக்கு பிடிக்கவில்லை என மீனா வருத்தத்துடன் சொன்னார். நான் இதில் நடிப்பது குறித்து நிறைய நண்பர்கள் கேட்டு விசாரித்தார்கள்.
இணையத் தொடரில் சென்சார் இல்லை என்பதால் முன் கூட்டியே கதை, கதாபாத்திரம் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி கேட்டுக்கொண்டேன். இதில் ஆபாசம் இருக்கக்கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.