மும்பை: ''காதலுக்கு வயது ஒரு தடையில்லை. என்னைவிட வயது குறைந்த நபரை காதலிப்பதில் தவறில்லை,'' என்று பாலிவுட் நடிகை மலைகா அரோரா கூறியுள்ளார்.
அவன் மீது எனக்கு இருப்பது காமம் இல்லை! 34 வயது நடிகர் குறித்து 45 வயது நடிகை சொன்ன சீக்ரெட்!

இதுபற்றி ஊடகம் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ள மலைகா அரோரா, ''காதலுக்கு வயது வித்தியாசம் பெரிய தடையில்லை. இரு மனம் சம்பந்தப்பட்ட விசயம்தான் காதல். ஆனால், நமது சமூகம் காதலை வயது வித்தியாசம் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்ளும். இங்கே, வயதான ஆண்கள், இளம்பெண்களை காதலித்தால் பாராட்டுவார்கள்.
என்னைப் போன்ற வயதான பெண்கள், இளைஞர்களுடன் டேட்டிங் சென்றால் விமர்சனம் செய்வார்கள். எனக்கு வயதானாலும், நான் ஒன்றும் இளைஞர்கள் மீது காமவெறி பிடித்து அலையவில்லை. அர்ஜூன் கபூருடன் எனக்கு காமம் என்பதைவிட காதல் என்று சொல்வதுதான் சரி,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், அர்ஜூன் கபூரை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, மலைக்கா அரோரா பதிலளிக்க மறுத்துவிட்டார். தற்போதைக்கு காதல்தான் முக்கியம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.