மும்பை: நடிகை மலைகா அரோரா உள்ளாடையுடன் ரிஸ்கான யோகா செய்து அசத்தியுள்ளார்.
தோழியை குனிய வைத்து பிரபல நடிகை செய்த ரிஸ்க் யோகா! 45 வயதில் இது தேவையா? கலாய்க்கும் ரசிகர்கள்!
உயிரே படத்தில் ஷாரூக் கானுடன், ஓடும் ரயிலில், தய்யா தய்யா பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. தற்போது இவருக்கு 45 வயதாகிறது. ஆனால், நேர்த்தியான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலமாக இன்னமும் தனது உடலை, சிக்கென இவர் பராமரித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இந்தியா முழுவதும் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மலைகாவும், மிக ரிஸ்க்கான யோகா முத்திரையை செய்து அசத்தியுள்ளார். உள்ளாடை சகிதமாக அவர் செய்யும் இந்த யோக முத்திரையை பாலிவுட்டின் பிரபல உடற்பயிற்சி நிபுணர் நம்ராதா புரோஹித், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
அதாவது, கீழே ஒருவர் குனிந்து நிற்க, அவருக்கு மேலே தலைகீழாக படுத்தபடி பாதி உடலை அந்தரத்தில் வைத்து, மலைகா அரோரா இந்த போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் உடலை சிக்கென பராமரிக்கும் மலைகாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.