ஆண்கள் இன்னும் அப்படித்தான் பார்க்கிறார்கள்! 48 வயதில் லட்சுமி ராமகிருஷ்ணன் படும் வேதனை!

பெண்கள் மீதான குற்றங்களுக்கு சினிமா முக்கிய காரணம்: லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்


சென்னை: பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்கு, சினிமா படங்கள் முக்கிய பங்காற்றுவதாக, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், பெண்கள் மீது தொடரும் பாலியல் குற்ற சம்பவங்கள் பற்றி வேதனை தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ''சினிமா படங்களில் பெண்களை மோகப் பொருளாகவே சித்தரிக்கிறார்கள். இந்த படங்களை பார்க்கும் பலரும் அதே கண்ணோட்டத்தில் பெண்களை பார்க்க தொடங்குகிறார்கள். இதுதான் பெண்கள் மீதான குற்றங்கள் மேன்மேலும் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

சினிமா படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியும் மக்களின் மனதில் ஆழ பதிந்து விடுகிறது. இதனால்தான், ஒரு பெண் காதலிக்க மறுத்தால், உடனே அவள் மீது ஆசிட் வீசவும், அரிவாளால் வெட்டவும் இளைஞர்கள் முனைகின்றனர். 

இத்தகைய கொடூர எண்ணம் சினிமா காட்சிகளால்தான் விதைக்கப்படுகிறது. எனவே, சமூக அக்கறையுள்ள படங்களை தயாரிக்க, இன்றைய சினிமா தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டுகிறேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.