நள்ளிரவில் நேர்ந்த திக் திக் சம்பவம்! அதிர்ச்சியில் இருந்து மீளாத நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்!

சென்னை: நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தனக்கு நேர்ந்த ஒரு திக் திக் அனுபவத்தை தற்போது வெளியில் தெரிவித்துள்ளார்.


பாலக்காடு பிராமணரான லட்சுமி ராமகிருஷ்ணன், திருமணமாகி, ஓமன் நாட்டில் வசித்து வந்தவர். பின்னர், சினிமாவிலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக டிவியிலும் பிரபலமானார். இவர், திருமணமான புதிதில், அதாவது, கடந்த 1987ம் ஆண்டு சென்னையில்தான் வசித்து வந்திருக்கிறார்.

அப்போது, தனக்கு நேர்ந்த மறக்க முடியாத ஒரு அனுபவம் பற்றி வார இதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ''1987ல் ஒரு பொட்டிக் கடை நடத்தி வந்தேன். அதையொட்டி, உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில், நடைபெற்ற கண்காட்சியில், ஸ்டால் அமைத்திருந்தேன்.

அதில், நல்ல வியாபாரமும் கிடைத்தது. ஒருநாள், வியாபாரம் முடிந்து, புடவைகளை காரில் எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டேன். நேரம், அப்போது நள்ளிரவு 11.30 மணி. இப்போது உள்ளதைப் போல, சென்னை திருவான்மியூர் பகுதி, அப்போ கிடையாது.

திருவான்மியூர் பஸ் டெப்போவை தாண்டினால், ஒரே காடாக இருக்கும். அந்த நேரத்தில், பயந்தபடியே, காரை ஓட்டி வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் விடிந்து, காரை எடுத்து பார்த்தால், அதில், ஒரு துளி பெட்ரோல் கூட இல்லை. எல்லாம் தீர்ந்து போய்விட்டிருந்தது. பெட்ரோல் இல்லாமலேயே எங்கும் வழியில் நிற்காமல் நான் வீடு வந்து சேர்ந்தது மிகப்பெரும் வியப்பாக இருந்தது.

இப்போது நினைத்தாலும், அந்த சம்பவம் எனக்கு லேசான பயம் கொடுக்கும். தற்போதும், எங்கு புறப்பட்டாலும், முதலில், காரில் பெட்ரோல் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வேன். அன்றைய நாளில், நள்ளிரவில் எங்கேனும் பெட்ரோல் தீர்ந்து நின்றிருந்தால், என் நிலை என்னவாகி இருக்கும் என்றே நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அன்றைய தினம், என் அக்கா கொடுத்த ஆஞ்சநேயர் சிலையை காரில் வைத்திருந்தேன். அந்த ஆஞ்சநேயர்தான் என்னை காப்பாற்றியதாக, இப்பவும் நினைத்துக் கொள்வேன்,'' என்று லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.