பல நாள் காக்க வைத்து பிறகு கைவிட்ட ராகுல்! நடிகை குஷ்பு எடுத்த முக்கிய முடிவு!

சென்னை: நடிகை குஷ்பு மீண்டும் சினிமா படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


குஷ்பு, பிரபல நடிகையாக வலம் வந்த நிலையில், திமுக.,வில் இணைந்து திடீரென அரசியல் பயணத்தை தொடங்கினார்.  கடந்த 1980ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் அவர், அரசியலுக்கு சென்றபின், நடிப்பிற்கு இடைவெளி விட்டார். கடந்த 2014ம் ஆண்டில் திமுக.,வில் இருந்து வெளியேறிய குஷ்பு தன்னை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொண்டார்.

அவருக்கு செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து வருகிறார். 

இதற்கிடையே, மீண்டும் சினிமாவில் நடிக்கலாமா, வேண்டாமா எனக் கேட்டு, ட்விட்டரில் குஷ்பு ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த ரசிகர்கள் பலரும் அரசியலில் இருந்து விலகி, மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்துங்கள், என்று கூறியுள்ளனர்.

இதைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்த குஷ்பு, விரைவில் இதுபற்றி நல்ல முடிவை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க முடிவெடுத்துவிட்டார் என்று, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.