படுக்கையறை காட்சிகளில் நடிக்க பயிற்சி தேவை! இளம் நடிகையின் விபரீத வேண்டுகோள்!

படுக்கையறை காட்சிகளில் நடிக்க, பயிற்சி பட்டறை தேவை என்று, நடிகை கல்கி கோய்ச்லின் கூறியுள்ளார்.


புதுச்சேரியில், இந்திய-பிரெஞ்ச் பெற்றோர்களுக்கு பிறந்தவரான கல்கி கோய்ச்லின், தற்போது  இந்தியாவில் வசித்தபடியே, சினிமா படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்து வருகிறார். தேவ் டி, யே ஜவானி ஹாய் தீவானி, தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

அத்துடன், 2014ம் ஆண்டு வெளியான மார்கரிடா வித் எ ஸ்ட்ராவ் என்ற படத்தில் நடித்தற்காக, ஸ்பெஷல் ஜூரி அவார்டு பிரிவில், தேசிய விருதை வென்றும் உள்ளார். இந்நிலையில், இவர் இந்திய சினிமாத்துறை பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், நடனம், சண்டை காட்சிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படுவது போல, படுக்கையறை காட்சிகளுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், அனைவரும் எளிதாக நடிக்க முடியும் என்று,  கூறியுள்ளார். 

இது மட்டுமின்றி, #MeToo சர்ச்சை புகார்கள் வெளிவந்ததை தொடர்ந்து, இந்திய சினிமாத் துறையில் இயக்குனர்களின் அணுகுமுறையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்கி கோய்ச்லின் குறிப்பிட்டுள்ளார். அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எப்படி ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய செயல்திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததை, ஆச்சரியமாகவும், கல்கி கோய்ச்லின் சுட்டிக்காட்டுகிறார்.  பயிற்சியின் போது யாரும் யாருடனும் வரம்பு மீறாமல் இருந்தால் சரி.