எனக்கு ஒரு குழந்தை ஏற்பாடு செய்ய முடியுமா? ராகவா லாரன்ஸை அதிர வைத்த சாண்டியின் முதல் மனைவி!

பிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை காஜல் பசுபதி தனக்கு தத்தெடுத்து வளர்ப்பதற்கு குழந்தை வேண்டும் என்று நடன இயக்குனர் ராகவா லாரன்சை கேட்டுள்ளார்.


நடிகை காஜல் பசுபதி மௌனகுரு , கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியான நடிகை காஜல் பசுபதி மனதை உருக்கும் பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தையடுத்து பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை சிறுவனுக்கு செலுத்தினர். அந்தவகையில் நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டரருமான ராகவா லாரன்ஸ் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் . அந்த பதிவில் சுஜித்தின் பெற்றோரை வேறு ஒரு குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தைக்கு சுஜித் என்று பெயரிட்டு வளர்த்து வாருங்கள். அந்த குழந்தைக்கு தேவையான படிப்பு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் இதன் மூலம் உங்களுடைய சுஜித் எப்போதும் உங்களுடனேயே இருப்பான் என்று கூறியிருந்தார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் ராகவா லாரன்ஸை புகழ்ந்து தள்ளினர். 

தற்போது இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை காஜல் பசுபதி புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தான் ஒவ்வொரு நாளும் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அது மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். ஆகையால் தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் குழந்தையில்லாமல் ஒருவரது வாழ்க்கை முழுமையடையாது என்று கூறிய காஜல் பசுபதி தத்து எடுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல ஆகையால்தான் உங்களது உதவியை நான் நாடுகின்றேன். தத்தெடுக்கும் குழந்தைக்கான எல்லா செலவுகளையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என்றும் நடிகை காஜல் பசுபதி மனதை உருக்கும் வகையில் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.