பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை! நீட் எப்படி எழுத முடியும்? மோடிக்கு ஜோதிகா கேள்வி!

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுத முடியும் என்று நடிகை ஜோதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.


சென்னையில் ராட்சசி படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நடிகை ஜோதிகா பேசினார். அப்போது அவர் பேசியதாவது: அகரம் அறக்கட்டளை மூலமாக பல மாணவ, மாணவிகள் உதவி கேட்டு எங்களிடம் வருகிறார்கள்.

வருபவர்கள் அனைவருமே அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தான். அவர்களின் பள்ளிக் கூடம் எப்படி இருக்கும் என்று அவர்கள் கூறுவார்கள். அதாவது வகுப்பில் எந்த அடிப்படை வசதியும் அவர்களுக்கு இல்லை. 

ஏன் ஆசிரியர்கள் கூட வருவதில்லை. தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அவர்களால் நீட் எழுத முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த அவலங்கள் குறித்து பேசத்தான் ராட்சசசி படத்தை எடுத்துள்ளோம். என்று கூறி ஜோதிகா முடித்துக் கொண்டார். நீட் தேர்வு என்பது மத்திய அரசு நடத்துவது. மத்திய அரசை நடத்துவது மோடி. அப்படி இருக்கையில் மோடியிடமே கேள்வி எழுப்பும் அளவிற்கு ஜோதிகாவிற்கு துணிச்சல் வந்துவிட்டதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.