45 வயதில் புதிய தொழிலில் களம் இறங்கும் ஐஸ்வர்யா ராய்! என்ன தெரியுமா?

மும்பை: ஆம்பி என்ற தொழில் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், பெங்களூருவைச் சேர்ந்த ஆம்பி (Ambee) என்ற ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனத்தில், ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்ய உள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இந்த முதலீட்டை தனது தாய் விருந்தா உடன் சேர்ந்து ஐஸ்வர்யா செய்திருக்கிறார். 

ஆம்பி நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய ஏர் ஃபியூரிஃபையர்களை தயாரிக்க உள்ளது.  இதற்கு முன், ஐஸ்வர்யா ராய், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி மையங்களில் முதலீடு செய்திருந்தார். ஐஸ்வர்யா மட்டுமின்றி, சமீபகாலமாக, ஸ்டார்ட் அப் தொழில்களில் முதலீடு செய்வதை பாலிவுட் பிரபலங்கள் வாடிக்கையாகச் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பிரியங்கா சோப்ரா பம்பிள் இந்தியாவிலும், தீபிகா படுகோனே ட்ரம் ஃபுட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும், அலியா பட் ஸ்டைல்கிராக்கர் நிறுவனத்திலும்,  அக்‌ஷய் குமார் ஜிஓக்யூஐஐ நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.