குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்! வயது வந்த மகளை துன்புறுத்துகிறார்! 2வது கணவன் மீது நடிகை பகீர் புகார்!

நடிகை ஸ்வேதா திவாரி தனது கணவர் அபிநவ் கோலி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் குடித்துவிட்டு வந்து தன்னை மற்றும் தன் மகளை துன்புறுத்துவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


நடிகை ஸ்வேதா மற்றும் அபிநவ் கோழி ஆகிய இருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அபிநவ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் சண்டை போடுவதாக தெரிகிறது.

மற்றும் மகள் பாலக்கை அடித்து துன்புறுத்தியதாக ஸ்வேதா கண்டிவாலியில் உள்ள சம்தா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மற்றும் காவல் நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இருவரும் தாங்கள் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.