திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பில்லா 2 நடிகை! காரணம் யார் தெரியுமா?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை எமி ஜாக்சன் தான் கர்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு இட்டார்


இவர் திருமணம் ஆகாமலேயே கர்பமாக இருப்பதால் நெட்டிசன்கள் இவரை கலாய்த்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து இவர் தனது காதலர் ஜியார்ஜ் -உடன் நிச்சயதார்தம் செய்து கொண்டார்.  இவர்களது திருமணம் வரும் 2020 -இல் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த வரிசையில் மேலும் ஒரு நடிகை தற்போது வந்துள்ளார்.  அவர் வெறும் யாரும் இல்லை பில்லா -2 திரைப்படத்தில் நடித்த நடிகை ப்ரூனா தான். இவர் கடந்த 5 வருடங்களாக ஆலன் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார்.  தற்போது இவர் மூலம் கர்பம் அடைந்து உள்ளார் நடிகை ப்ரூனா.

சமீபத்தில் நடிகை ப்ரூனா  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் இவரிடம் "திருமணம் ஆகாமலேயே  குழந்தை பெற்று கொள்ள போகிறீர்களே, இதனை பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு சற்றும் யோசிக்காமல் ப்ரூனா, திருமணம் என்பது வெறும் ஒரு சான்றிதழ் தான் , அது ஒன்றும் எங்களை இணைக்க போவதில்லை மாறாக காதல் மட்டுமே தேவை எங்கள் இருவரையும் இணைக்க என்று பதில் அளித்தார்.

அதுமட்டுமில்லாமல் நாங்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகிறோம், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்தி வைத்துள்ளோம். ஆகவே நாங்கள் குழந்தை பெற்று கொள்வதற்கு அணைத்து தகுதிகளையும் பெற்று உள்ளோம் எனவும் கூறினார்.  நடிகை ப்ரூனா, பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார், தமிழில் பில்லா-2 திரை படத்தில் சமீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.