குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள மறுத்த அதிதி மேனனை மதுரை நீதிமன்றம் கடுமையாக கண்டித்து கலந்து கொள்ள வைத்துள்ளது.
என்னை அவன் கூட போகச் சொல்லாதீங்க..! நீதிமன்றத்தில் கதறிய பிரபல நடிகை! விவாகரத்து வழக்கில் திருப்பம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அபி சரவணன் உடன் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை அதிதி மேனன், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். இந்த விவாகரத்து வழக்கில் தொடர்ந்து ஆஜராக மறுத்து வந்தார் அதிதிமேனன்.
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு மதுரை குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு அதிதிமேனன் ஆஜராகவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்படுவார் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து, அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் இருவரும் மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் குடும்பநல கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதற்கு மறுப்பு தெரிவித்தார் அதிதி மேனன்.
கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாது என மறுத்து வந்த அதிதி மேனனின் இந்த முடிவிற்கு கடும் கண்டனம் விதித்த நீதிபதி, கட்டாயம் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும்படி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.