கணவருக்கு பிசினசில் செம லாஸ்! மீண்டும் திறமை காட்ட தயாராகும் அசின்!

கணவருக்கு தொழிலில் அடுத்தடுத்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர்அசின். அஜித், விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தார். இந்தி திரையுலகில் கஜினி படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த அசின் பிறகு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

2016ம் ஆண்டு அசினுக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சினிமாவில் இருந்து அசின் முழுவதுமாக விலகினார். டெல்லி மற்றும் மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அசின் கணவர் ராகுல் சர்மா மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். அதோடு மட்டும் அல்லாமல் இந்தியாவின் முதல் எலட்ரிக் சைக்கிள் நிறுவனத்தையும் ராகுல் சர்மா தான் தொடங்கினார். இந்த இரண்டு தொழிலுமே தற்போது ராகுல் சர்மாவுக்கு நஷ்டம் என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில் அசின் திடீரென ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதன் மூலம் மீண்டும் திரையுலக வாய்ப்புகளை பிடிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் இந்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதாகவும் அது சரிவரவில்லை என்றால் தமிழில் வாய்ப்பு தேடி அசின் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.