கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் பிரபல நடிகையின் மகள் ஆரின்! யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

நடிகை அசின் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக இருந்தவர். இவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இவர் கேரளாவை சேர்ந்தவர்.


தமிழில் உள்ளம் கேட்குமே, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி போக்கிரி, காவலன் என பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர். இவருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தற்போது 18 மாத குழந்தையாக வளர்ந்து மிக அழகாக உள்ளது. அதற்கு ஆரின் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த குழந்தையின் ஒன்றரை வருடத்தைக் கொண்டாடும் வகையில் அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஆரினின்’ அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி வைலாகியுள்ளது.