பட வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்..! படுக்கை அறை..! முதல் முறையாக வாய் திறந்த பாகுபலி அனுஷ்கா..!

சென்னை: ''சினிமா வாய்ப்பு தருவதற்காக படுக்க அழைக்கிறார்கள்,'' என்று பிரபல நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்


பாடகி சின்மயி, வைரமுத்து மீது பாலியல் புகார் எழுப்பி, #Metoo என்ற டிரெண்டிங்கை ஏற்படுத்தினார். இதையொட்டி, பல நடிகர், நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த, பாலியல் சுரண்டலை வெளிப்படுத்தினர். இதில், நடிகை ஸ்ரீரெட்டி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் மிகவும்  அதிரடியாகவும், பெரும் சர்ச்சையாகவும் இருந்தன. அவர் பல முன்னணி நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மீது  நேரடியாகவே பாலியல் புகார் கூறிவருகிறார். இதுபற்றி அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வதும் அவரது வழக்கமாக உள்ளது.  

இந்நிலையில், நடிகை அனுஷ்கா 'சைலன்ஸ்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதையொட்டி,  அவரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள், ''தெலுங்கு சினிமா உலகில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி நடிகைகளை சிலர் செக்ஸ்க்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?,'' என்று கேட்டனர்.  

அதற்கு பதில் அளித்த அனுஷ்கா, ''அப்படி ஒரு விசயம் முற்றிலுமாக இல்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், எனக்கு இதுவரை அப்படி எந்த அனுபவமும் ஏற்படவில்லை. ஏனென்றால், நான் வெளிப்படையான ஆள். இதுபோன்ற விசயங்களை  பெண்களிடம் சினிமா துறையினர் செக்ஸ் ரீதியான ஆதாயங்களை எதிர்பார்ப்பது தவறு,'' என்று குறிப்பிட்டார்.  அனுஷ்காவின் பேச்சு பல தரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.