பின்னால் இருந்து கட்டிப்பிடித்து செக்ஸ் டார்ச்சர்! இயக்குனர் மீது நடிகை மீ டூ புகார்!

‘’ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், 2வது திருமணம் செய்துகொள்ளும்படி, என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்தார்,’’ என்று முன்னணி நடிகை ஒருவர் இயக்குனர் மீது புகார் கூறியுள்ளார்.


பெங்காலி திரைப்பட நடிகை அனுரூபா சக்ரபோர்த்தி இந்த புகாரை எழுப்பியுள்ளார். பெங்காலி சினிமாவில் பிரபல இயக்குனராக உள்ள பாவெல் மீதுதான் அவர் புகார் தெரிவித்துள்ளார்

 

இதுபற்றி, தனது சமூக ஊடக பக்கத்தில் அனுரூபா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,’’ரஸகுலா என்ற படத்தில் நடிப்பதற்காக, என்னை இயக்குனர் பாவெல் ஆடிசனுக்கு அழைத்தார். அதன்பின், எனக்கு வாய்ப்பு எதுவும் இல்லை.

 

ஆனால், ஒரு நாள், இயக்குனர் பாவெல் கிட்ட இருந்து, எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், என்னைப் பார்க்க ராதிகா ஆப்தே மாதிரி இருப்பதாகவும், தனது புதிய படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

 

இதற்காக, தனது வீட்டுக்கு நேரில் வரும்படி அழைத்தார். அங்கே சென்றபோது, படத்தின் முழு ஸ்கிரிப்டையும் என்னிடம் அவர் கொடுத்தார். அப்போது நான் மேக்அப் எதுவும் போடாமல், தலைக்கு எண்ணெய் வைத்து சீவி, தொள தொளவென உடைகள் அணிந்து, சென்றேன்.

 

என்னைப் பார்த்ததும் நான் எதோ ஏழை குடும்பத்துப் பெண் என்று அவர் நினைத்துக் கொண்டுவிட்டார். என் மேல் இரக்கம் கொண்டவர் போல பேசிய பாவெல், திடீரென என்னை பின்புறமாக இருந்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார். எனினும், நான் அவரது பிடியை சமாளித்து, அங்கிருந்து தப்பித்து ஓடிவந்துவிட்டேன்.

 

இது மட்டுமல்ல. புருலியா பகுதியில் செயல்படும் மாவோயிஸ்ட்களை கண்காணிக்கும் ரகசிய போலீஸ் என்றும் தன்னை அவர் கூறிக் கொண்டார். இதன்பேரில், ஒரு பெண்ணை ஏமாற்றி, அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

 

அதன்பிறகும், என்னை விடாமல் திருமணம் செய்துகொள்ளும்படி துரத்தி துரத்தி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். எனினும், நான் கண்டுகொள்ளவில்லை ,’’ என்று குறிப்பிட்டுள்ளார்அதேசமயம், இந்த பாலியல் புகாரை இயக்குனர் பாவெல் மறுத்துள்ளார்.

 

இதுபற்றி அவர் கூறுகையில், ‘’எனது கேரியரில் இதுவரை 4 படங்களை இயக்கியுள்ளேன். 100க்கும் அதிகமான பெண்களுடன் நான் பணிபுரிந்துள்ளேன். ஆனால், யாருமே என் நடத்தை பற்றி குறை சொன்னதில்லை.

 

அனுரூபாவின் புகாரில் உண்மையில்லை,’’ என்று தெரிவித்துள்ளார்எனினும், இந்த புகாரால், பெங்காலி சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.