மீண்டும் பணிப்பெண் வேலைக்குச் சென்ற ஹீரோயின்!

ஹீரோயினாக நடித்து படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையிலும் தனது பணிப் பெண் வேலைக்கு நடிகை ஒருவர் திரும்பியுள்ளார்.


கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் நெடுநல்வாடை. இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நெடுநெல்வாடை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் அஞ்சலி நாயர். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னராக விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.

நெடுநல்வாடை படத்தில் நடிப்பதற்காக விமான பணிப்பெண் வேலையில் இருந்து சிறிது பிரேக் எடுத்திருந்தார். தற்போது படமும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் விமானத்தில் பணிப்பெண் வேலையில் தொடர்ந்து வருகிறார் அஞ்சலி நாயர்.

நெடுநல்வாடை படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்திருந்தும் அவசர அவசரமாக படங்களை ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்று அஞ்சலி நாயர் கூறியுள்ளார். நல்ல கதையுள்ள திரைப் படங்களை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதுவரை விமானத்தில் பணிப்பெண்ணாக தொடரவுள்ளதாகவும் அஞ்சலி நாயர் கூறியுள்ளார்.