ஐஸ்வர்யா தத்தா தமிழ் நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக மாறிவிட்டார். கொல்கத்தாவில் பிறந்த ஐஸ்வர்யா தத்தா 2015ல் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' எனும் தமிழ் படத்தில் அறிமுகமானார்.
4வது முறையாக காதலரை மாற்றிய பிக்பாஸ் பிரபலம்! அதிர்ச்சியில் தோழிகள்!

2018 ஆம் ஆண்டில்,விஜய் தொலைக்காட்சி நடந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் 'பிக் பாஸ் சீசன் 2' இல் கலந்துக்கொண்டார்.இந்த சீசனில் ரன்னராக வெற்றி பெற்றார். 'கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா', 'கன்னித்தீவு' உள்ளிட்ட படங்கள் அவர் கைவசமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், தான் காதலிப்பதாக ஐஸ்வர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுளார்.ஆனால் தான் யாரை காதலிக்கிறேன் என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.
அதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், 'வாவ் சூப்பர்,யார் அந்த அதிர்ஷ்டசாலி', என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். அதேசமயம் 'வட போச்சே' என சிலர் வருத்தப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில் சிலநாட்கள் முன் ஐஸ்வர்யா கோபி என்பவரை பாய் பிரண்ட் என பேசப்பட்டது.தான் காதலில் விழுந்துள்ளதாக ஐஸ்வரியா கூறியுள்ளதால், கோபியை பற்றி தான் டிவீட் செய்துள்ளாரோ என்ற பேச்சு அடிப்படுகிறது. அதே சமயம் இது ஐஸ்வர்யா தத்தாவின் 4வது காதலர் என்று ஒரு பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது.