கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான நடிகை! புகைப்படத்தையும் வெளியிட்டதால் ரசிகர்கள் ஷாக்!

திருமணம் செய்து கொள்ளாமலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


மதராசப் பட்டணம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழகத்திலேயே தங்கி இயக்குனர் சங்கரின் நடிகர் ரஜினியுடன் எந்திரன் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

நடிகர் தனுஷ் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் ஜோடியாக நடித்த எமி ஜாக்சன் இந்தி திரையுலகிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் என்பவரை தான் காதலிப்பதாக கூறி ஒரு புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எமி ஜாக்சனுக்கு தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானது எப்படி என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு ஒரு குழந்தை கிடைக்கப் போகிறது என்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இப்படி ஒரு மகிழ்ச்சியில் இதற்கு முன்னர் தான் இருந்ததே இல்லை என்றும் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை அங்கு நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கம். அந்த வகையில் எமி ஜாக்சன் தனது காதலர் ஜார்ஜை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக ஒரு தகவல் இருக்கிறது.