கோடி கோடியாக மோசடி! பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் கைது!

மோசடி வழக்கில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் பாய் ஃப்ரெண்ட் கோபி கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தனது கையில் கோபி என்று பச்சை குத்தியிருந்தார். அந்த கோபி என்ற நபர் இடம், பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் தொலைபேசியில் பேசினார். அந்த கோபி என்பவர் யார் என்பது குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

அவரது முழுப்பெயர் கோபிகிருஷ்ணன். பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியவன் தான் கோபிகிருஷ்ணன். குறைந்த வட்டிக்கு வங்கி கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றியதும் இதே கோபிகிருஷ்ணன் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் ஐஸ்வர்யாவை, அனுப்பி வைத்ததே கோபியின் மாஸ்டர் பிளான் தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தி பணம் கறப்பதே இவர்களது திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கோபி கிருஷ்ணன் நடத்திய அனைத்து போலி நிறுவனங்களுக்கும் ஐஸ்வர்யா தத்தா தான் பார்ட்னர் எனவும் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் வைத்து கோபிகிருஷ்ணன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தபோது, ஐஸ்வர்யாவும் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுபற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டாள், ஒரு காலத்தில் கோபி நண்பராக இருந்தார் என்றும், தன்னை இந்த விவகாரத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் கூறி நழுவினார்.