நள்ளிரவு..! வாடகை கார்..! தகாத இடத்தில் தொட்டு..! பிரபல நடிகைக்கு டிரைவரால் நேர்ந்த விபரீத அனுபவம்!

கொல்கத்தா: புத்தாண்டு நாளில் டிவி நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டிவி நடிகை ஒருவர் கொல்கத்தாவில் புத்தாண்டு பிறப்பை கொண்டாடிவிட்டு, தனது வீட்டிற்குச் செல்ல வாடகை கார் ஒன்றை ஆப் மூலமாக புக் செய்தார். ஆனால், அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் நள்ளிரவு நேரம் என்பதால், நடிகையை காரில் ஏற்றிக் கொண்டதும், பயண முன்பதிவை கேன்சல் செய்த அந்த நபர், காரை வேகமாக ஓட்டியதோடு, நடிகைக்கு பாலியல் தொல்லையும் அளித்ததாகக் கூறப்படுகிறது.  

நடிகை சத்தம் போட்டும் அவர் காரை நிறுத்தவில்லையாம். இதையடுத்து, கையில் இருந்த ஃபோன் மூலமாக, அவசர உதவி எண் 100க்கு போன் செய்து, அவர் கொல்கத்தா போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதன்பேரில், அந்த நபரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.