2வது திருமணம் செய்து கொள்ளாமலேயே பாம்பே பாடகருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அமலா பால்! யாருடன் தெரியுமா?

சென்னை: நடிகை அமலா பால் இந்தி நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால், பிரபல இயக்குனர் விஜயை திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றனர். இந்நிலையில்,   அமலா பால் வேறு சில ஆண் நண்பர்களுடன் பழகி வருவதாக, அவ்வப்போது தகவல் வெளியாவது வழக்கம்.  

இதனை உறுதிப்படுத்துவது போல, தற்போது இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் அமலா பால் நெருக்கமாக நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களை முதலில் பவ்னிந்தர் சிங், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அதில் இருப்பவர் தனது காதலி என்று குறிப்பிடுகிறார். அந்த பெண்ணை  பவ்னிந்தர் சிங் கட்டிப்பிடித்தபடி இருக்கிறார். தவிர மற்ற சில படங்களில் அந்த பெண் பர்தா அணிந்தும் காணப்படுகிறார்.

தனது பிரபல்யத்தை மறைக்க, அமலா பால்,  அவ்வாறு வேடமிட்டிருக்கலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.  விரைவில் இதனை அமலா பால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. சமீபத்தில், ''நான் ஒரு நபரை காதலிக்கிறேன். அவர், எனது அம்மா போல என்னை பார்த்துக் கொள்கிறார். விரைவில் அதுபற்றி முழு விவரத்தை அறிவிப்பேன்,'' என்று அமலா பால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.