நான் இப்படி ஒரு மகிழ்ச்சியில் இருந்ததே இல்லை..! கணவன் குறித்து நெகிழ்ந்த பிரபல நடிகை!

மும்பை: நடிகை சோனம் கபூர், திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.


 பிரபல நடிகை சோனம் கபூர், ஆனந்த் அஹூஜாவை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்தார். நீண்ட காலமாக இருவரும் டேட்டிங் செய்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் வாழ்த்த, இவர்களின் திருமணம் ஆடம்பரமாக நடந்தது. திருமணமாகி, ஓராண்டு கடந்த நிலையில், தனது திருமண வாழ்க்கை பற்றி காஸ்மோபோலிடன் பத்திரிகைக்கு சோனம் கபூர் பேட்டி அளித்துள்ளார்.  

அதில், ''எனக்கு ஒரு அழகான வாழ்க்கை வாய்க்கப் பெற்றுள்ளது. ஆனந்தை திருமணம் செய்தது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட விசயமாகும். ஆனால், திருமண வாழ்க்கைக்கான மகிழ்ச்சி எதையும் இதுவரை நான் அனுபவிக்கவில்லை. எங்கள் இருவருக்கும் வேலைகள் நிறைய இருப்பதால், ஏற்கனவே சிங்கிளாக இருந்ததைப் போன்ற வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறோம்.

இன்னும் நாங்கள் முழுவீச்சில் திருமண வாழ்வை தொடங்கவில்லை. விரைவில் நல்ல முறையில் வாழ்வோம் என நம்புகிறோம்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.  

சோனம் கபூரின் இந்த பேட்டி பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.