நடிகை முன் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய விஷால்! அனிசாவுடனான நிச்சயதார்த்தத்தில் சுவாரஸ்யம்!

நடிகை அனிஷா ரெட்டியிடம் மண்டியிட்டு நடிகர் விஷால் காதலை வெளிப்படுத்தினார்.


தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் நடிகர் விஷால் அறிவித்திருந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பசுபதி, இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி, அவரது மனைவி குஷ்பு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விஷால் அனிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தனது வருங்கால மனைவி முன் மண்டியிட்டு நடிகர் விஷால் தனது காதலை வெளிப்படுத்தினார்.

நடிகை அனிஷாவின் கையில் முத்தமிட்ட விஷால், மோதிரத்தை கையில் அணிவித்துவிட்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பின்னர் தனது வருங்கால மனைவிக்கு அவர் முத்தமிட்டார்.

இதைத் தொடர்ந்து இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு பரஸ்பரம் தங்களது காதலை ஒருவரிடம் ஒருவர் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வால் திருமண நிச்சயதார்த்த விழா களை கட்டியது.