பொள்ளாச்சி பெண்கள் சித்ரவதை! கொலை வெறியில் நடிகர் விஷால்!

ரேப் செய்பவர்களை உடனடியாக எந்த யோசனையும் இன்றி, தூக்கிலிட வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


விஷால் தற்போது அயோக்கியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிற்கு இடையே, பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி தனது கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அதில் அவர், ''ரேப் செய்தவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும். பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்து வீடியோ எடுத்து வந்த அந்த 4 பேரையும், விசாரணை எதுவுமின்றி தூக்கிலிட வேண்டும்.

இதைச் செய்ய 5நிமிடங்கள் போதும். அப்படிச் செய்தால்தான், ஒரு பெண்ணை தொடக்கூட எல்லோருக்கும் பயம் வரும். பாலியல் குற்றங்களை குறைக்க தூக்கு தண்டனை மட்டும்தான் ஒரே தீர்வாக இருக்கும்,'' என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியாக ட்வீட் மட்டும் போட்டுவிட்டு புரட்சி தளபதி விஷால் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் சின்மயியோ இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று ட்விட்டரில் பலரின் ஆதரவை திரட்டி வருகிறார்.