நடிகர் விக்ரமின் மகனான துருவ் தான் ஒரு "விஜய்" ரசிகன் என்று கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் மகன் துருவின் பேவரிட் ஹீரோ அவர் இல்லியாம்! இவர் தானாம்! செம குஷியில் ரசிகர்கள்!
பிரபல கோலிவுட் கதாநாயகனான நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் தெலுங்கில் மாபெரும் வெற்றி அடைந்த "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தன்னுடைய முதல் படத்தை நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் "ஆதித்யா வர்மா" இந்த படமானது நவம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை ஊக்குவிப்பதற்காக இவர் நிறைய கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதேபோன்று கிண்டியில் அமைந்துள்ள பிரபல கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அங்கிருந்த மாணவர்கள் இவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அப்போது சிலர், "நீங்கள் தல ரசிகரா இல்லை தளபதி ரசிகரா" என்று கேட்டனர்.
முதலில் சிரித்த துருவ், பின்னர் "உண்மையை கூறப்போனால் தளபதி ரசிகன் தான்" என்று கூறியுள்ளார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் விசிலடித்து, கைத்தட்டி உற்சாகம் அடைந்தனர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் விக்ரமும், விஜய்யும் நடிக்கும் காலத்திலேயே மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "ஆதித்யா வர்மா" திரைப்படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிசய்யா என்பவர் குறிப்பிடத்தக்கது.