எங்கப்பா நடிக்குறது எங்க அம்மாக்கு பிடிக்கல..! விக்ரம் குடும்ப சீக்ரெட்டை உடைத்த மகன்!

சினிமாவில் கடின உழைப்பிற்க்கு அடையாளமாக இருப்பது நடிகர் விக்ரம் , அதிலும் அவரை முன்னோடியாக கொண்டாடும் ரசிகர்களை தாண்டிய ஒரு பெரும் கூட்டத்திற்க்கு சொந்தக்காரர்.


சமீபத்தில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்து வெளியான ஆதித்ய வர்மா படத்திற்க்கான பிரமோஷன் பணியில் அந்த படத்தின் குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் , விக்ரம் பற்றி அவரது மகன் தெரிவித்துள்ள கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதுவும் குடும்ப சீக்கிரட்டை உடைத்து பேசி உள்ளார் துருவ். தனது அப்பா விக்ரம் , சேது படத்திற்கு முன்னதாக பட்ட கஷ்டங்களை பார்த்து தனது அம்மா அவர் சினிமா துறையை விட்டு விலக வேண்டும் என நினைத்து, பிராத்தனை செய்தாராம். 

ஆனால் அவர் சேது படத்திற்க்காக கடினமாக உழைத்து அதில் வெற்றி கொண்ட பின்னர் அவருக்கான அங்கீகாரம் பார்த்து அவரை ஊக்கிவிக்க துவங்கினாராம். பொது வெளியில் துருவ் - விக்ரம் இருவரது செயல்பாடுகளும் ரசிகர்களால் ரசிக்கபடும் நிலையில், துருவ் இந்த தகவலை பகிர்ந்துள்ளதும் பெரும் பேசு பொருளாக சமூக வலை தளங்களில் மாறியுள்ளது எனலாம்.