தளபதி விஜயை பெருமை படுத்திய மகள் திவ்யா சாஷா!

இளையதளபதி விஜய்யின் மகளான திவ்யா சாஷா, பள்ளியில் நடந்த பேட்மிட்டன் போட்டியில் அசத்தியுள்ளார்.


அட்லி இயக்கிய தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தனது தந்தை விஜயுடன் திவ்யா சாஷா நடித்திருப்பார். தற்போது அட்லியுடன் மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ளார்.

 

   பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாரா, விவேக், மதயானைக்கூட்டம் புகழ் கதிர், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இது ஒருபுறமிருக்க நடிகர் விஜயின் வாரிசுகள் இருவரும் மாறி மாறி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், ஜங்ஷன் மற்றும் சிறி ஆகிய இரு குறும்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் குட்டி இளைய தளபதியாக இடம்பிடித்துள்ளார். 

 

இந்த நிலையில் விஜய்யின் மகளான திவ்யா சாஷா பேட்மிட்டன் போட்டியில் கலக்கியுள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்கன் சர்வதேச பள்ளியில் இவர் படித்து வருகிறார். பேட்மிட்டன் விளையாட்டு மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திவ்யா சாஷா, அந்தப் பள்ளியின் பேட்மிட்டன் அணியிலும் உள்ளார்.

 

   அண்மையில் பள்ளிகள் அளவில் நடைபெற்ற போட்டியில் திவ்யா சாஷா இடம் பெற்ற அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணியின் புகைப்படங்களை பள்ளி நிர்வாகமானது சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

   கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தனது மகள் விளையாடுவதை விஜய் பார்த்து ரசிக்கும் புகைப்படங்கள் பயங்கரமாக வைரலாயின. தற்போது விஜய்யின் மகள் வெற்றி பெற்றிருக்கும் தகவலையும் புகைப் படங்களையும் அவரது ரசிகர்கள் வேகமாகப் பரப்பி வருகின்றனர் ‌