விஜய் அதிரடி முடிவு! கில்லி, போக்கிரி பாணியில் மீண்டும் ஒரு ரீமேக்!

தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு தற்போது மகர்ஷி என்ற புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வம்சி பைடியாபள்ளி இயக்குகிறார். அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மிக வேகமாக இந்த படம் வளர்ந்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப மான செய்தி வந்து சேர்ந்துள்ளது. அது என்னவென்றால் இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முக்கியமான விஷயம் இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் மகேஷ் பாபு தெலுங்கில் நடித்து வெளியான ஒக்குடு, போக்கிரி ஆகிய படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் நடிகர் விஜய் நடித்து இருந்தார். கில்லி போக்கிரி அந்த இரண்டு படங்களும் நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆக்சன் ஹீரோவாக மாற்றின. இந்த நிலையில் தற்போது மீண்டும் மகேஷ்பாபுவின் ரீமேக்கில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இணையதளத்தில் வைரலாக பரவி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், இந்த தகவல் வெறும் வதந்தி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.