சென்னையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தடபுடல் விருந்து வைத்து பரிசுப்பொருட்களையும் கொடுத்து அசத்தியுள்ளார் விஜய்.
திடீர் விருந்து! கைநிறைய பரிசு! ஆட்டோ ஓட்டுனர்களை திக்குமுக்காட வைத்த விஜய்!
ஆண்டுதோறும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சாலிகிராமம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து தன்னுடைய திருமண மண்டபத்தில் தடபுடல் விருந்து வைத்து அசத்துவார் விஜய். இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தினால் விஜய் ஆல் இந்த விருந்தை கொடுக்க முடியவில்லை. தேர்தல் முடிந்த நிலையில் நேற்று சாலிகிராமம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டது.
விஜய்யின் திருமண மண்டபத்திற்கு சென்று அவர்களுக்கு அங்கு விருந்து கொடுத்து அசத்தினார் விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த். விருந்தோடு மட்டுமில்லாமல் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் பரிசு பொருள் ஒன்றையும் விஜய் சார்பில் கொடுத்து அசத்தினார் ரசிகர் மன்றத்தினர்.
வயிறார விருந்தை சாப்பிட்டுவிட்டு பரிசுப் பொருட்களையும் பெற்றுவிட்டு மனதார விஜய்யை வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர் ஆட்டோ ஓட்டுனர்கள்.