சர்கார் வெற்றி பெற்றதாக கூறி பிரபல தொலைக்காட்சி, செய்தித்தாள், வார இதழ், இணையதள முக்கியஸ்தர்களுக்கு நடிகர் விஜய் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் மது விருந்து அளித்ததுடன் ஒரு கோல்ட் காயினும் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.
சர்கார் சக்சஸ்! மீடியாக்காரர்களுக்கு விஜய் கொடுத்த கோல்டு காயின், தடபுடல் மது விருந்து!
கடந்த தீபாவளிக்கு நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ்
இயக்கத்தில் வெளியானது சர்கார் திரைப்படம். படம் சுமார் என்றும் சூப்பர் என்றும்
மொக்கை என்றும் மூன்று விதமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தீபாவளிக்கு வேறு
எந்தப்படமும் ரிலீஸ் ஆகாத காரணத்தினால் சர்கார் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல
வசூல். ஒட்டு மொத்தமாக சுமார் 250 கோடி ரூபாயை சர்கார் வசூலித்ததாக கூறுகிறார்கள்.
இந்த அளவிற்கு வசூல்
கிடைத்ததற்கு விஜய் – முருகதாஸ் – சன்பிக்சர்ஸ் கூட்டணி தான் காரணம் என்று
சொல்லித் தெரியவேண்டியதில்லை. படம் வெளியான மூன்றாவது நாளே சென்னையில் விஜய்,
முருகதாஸ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் வெற்றி விழாவை கொண்டாடிவிட்டனர். அந்த
நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜயின்
பி.ஆர்.ஓ ரியாசிடம் இருந்து இன்று காலை ஒவ்வொரு ஊடக நிறுவனத்திலும் முக்கிய
பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு மெசேஜ் சென்றது.
அதாவது இன்று மாலை
சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் விஜய் உங்களை சந்திக்க
விரும்புகார் என்று அந்த மெசேஜில் கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த சந்திப்பு
தனிப்பட்டது என்றும் கேமராக்களுக்கோ, செய்தியாளரின் உறவினருக்கோ அனுமதி இல்லை
என்றும் அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போல் தான் கடந்த ஆண்டு
மெர்சல் வெற்றி பெற்றதை தொடர்ந்தும் விஜய் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதாவது விஜய்
சந்தித்தது சாதாரண செய்தியாளர்களை அல்ல. இவர்கள் அனைவருமே ஒவ்வொரு ஊடக
நிறுவனத்தின் மிக முக்கியமானவர்கள். மேலும் சினிமா தொடர்பான செய்திகளை மட்டுமே
வழங்க கூடியவர்கள். தவிர ஒரு சில ஊடகங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களையும் கூட
இந்த சந்திப்பிற்கு விஜயின் பி.ஆர்.ஓ அழைத்திருந்தார். கடந்த முறை மெர்சல்
வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜய்க்கு அதன் பிறகு நெகடிவாக எந்த
விஷயமும் ஊடகங்களில் பெரிய அளவில் வெளியாகவில்லை.
சர்கார் படம்
தொடர்பான சர்ச்சையிலும் கூட தமிழக அரசுக்கும் – சன் பிக்சர்சுக்குமான
பிரச்சனையாகவே ஊடகங்கள் முன்வைத்தன. எனவே இந்த முறையும் ஊடக பிரபலங்களை சந்தித்து
அவர்களுடனான நட்பை ஆழப்படுத்திக் கொள்ளவே விஜய் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு
செய்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் சந்திப்பிற்கு வந்துள்ள செய்தியாளர்கள்,
மற்றும் ஊடக ஜாம்பவான்களுக்கு லீ ராயல் மெரிடியன் ஓட்டலின் பெஸ்ட் உணவு வகைகள்
டின்னராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டும் இல்லாமல், அன்லிமிடெட் சரக்கும் ஊடகத்தினருக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. பீர் குடிப்பவர்களுக்கு பீர், ஒயின் குடிப்பவர்களுக்கு ஒயின், ஜின் குடிப்பவர்களுக்கு ஜின், பிராந்தி குடிப்பவர்களுக்கு பிராந்தி என பாரபட்சம் இல்லாமல் கேட்கும் அளவிற்கு மது சப்ளை இருந்து கொண்டே இருந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் சைடிசா பிஸ் பின்ஞர், சிக்கன் லாலி பாப் என வெரைட்டியாக அசத்தியுள்ளார்கள்.
மது, பிரியானியோடு விருந்து முடிவடையவில்லை. வந்த ஊடகத்தினர் அனைவருக்கும் ஒரு கோல்டு காயினையும் கையோடு கொடுத்து அனுப்பினார் விஜயின் பி.ஆர்.ஓ. அதாவது ஒவ்வொரு ஊடகத்தில் இருந்தும் வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கோல்ட் காயின் கொடுக்கப்பட்டது. அந்த கோல்ட் காயின் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக வாங்கி செய்தியாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. சிலர் கோல்ட் காயின் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றனர்.
சொல்லப்போனால் தன்னை
சந்திக்க வந்த ஊடக பிரபலங்களை வயிறு முட்ட குடிக்க வைத்தும், வயிறு நிறைய சாப்பிட
வைத்தும் விஜய் அனுப்பியுள்ளார். இந்த
சந்திப்பிற்கு வந்தவர்களில் சிலர், மது வகைகளை தொடவில்லை. ஒன்லி டின்னரை மட்டும்
சாப்பிட்டு விட்டு நடையை கட்டினர். அவர்கள் விஜயுடன் அரசியல் குறித்தும், சினிமா
குறித்தும் தனிப்பட்ட முறையில் பேசவே வந்ததாக கூறிவிட்டு சென்றனர்.
பொதுவாக ஒரு படம்
வெற்றி பெற்றால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தான் செய்தியாளர்களுக்குட்ரீட்
கொடுப்பது வழக்கம். ஆனால் விஜயோ தனது படம் வெற்றி பெற்றால் தனிப்பட்ட முறையில்
அவரது செலவில் ட்ரீட் அதுவும் மது விருந்து கொடுப்பது நடிகராக இருந்து
அரசியல்வாதியான விஜயகாந்தின் பாணி என்கிறார்கள். விஜயகாந்த் தான் அவர் நடிகராக
இருக்கும் போது முதலே செய்தியாளர்களுக்கு இப்படியான விருந்தை கொடுத்து
வந்துள்ளார்.
தற்போது விஜயும்
அரசியல் ஆசையில் இருப்பதால் தான் படத்தின் வெற்றிக்கான ட்ரீட் என்று கூறி ஊடக
உலகில் அதிகாரமிக்கவர்களாக இருப்பவர்களுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துக்
கொள்வதாக கூறுகிறார்கள்.