சாந்தனு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் சூப்பராக உள்ளதென்று, நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
சர்கார் கதை திருட்டு பஞ்சாயத்து! பாக்யராஜூடன் சமாதானமாக சென்ற விஜய்!
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகன் சாந்தனு, தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இதன்படி, மத யானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் இயக்கும் புதிய படம் ஒன்றில் சாந்தனு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு, இராவணகோட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு, நடிகர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளதாகக் கூறி, நடிகர் சாந்தனு ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''காலை எழுந்ததும் , வாழ்த்துகள் நண்பா, செம டைட்டில், என முதல் ஆளாக, மெசேஜ் அனுப்பி என்னைப் பாராட்டிய விஜய் அண்ணாவுக்கு நன்றிகள் பல. இந்த ஒரு வார்த்தையே போதும், படத்திற்காக, எவ்வளவு கடுமையாக உழைக்கவும் தேவையான எனர்ஜி கிடைத்துவிட்டது,'' என சாந்தனு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடைய சர்கார் படத்தின் கதை திருட்டு பஞ்சாயத்தின் போது உதவி இயக்குனருக்கு ஆதரவாக இருந்த பாக்யராஜை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் பாக்யராஜின் மகனான சாந்தனுவையும் கூட விஜய் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை. மேலும் கதை திருட்டு விவகாரம் குறித்து விஜயுடன் பேச முயன்றதாகவும் ஆனால் முடியவில்லை என்றும் பாக்யராஜ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய் தானாக முன்வந்து பாக்யராஜ் மகனை பாராட்டு கதை திருட்டு பஞ்சாயத்து விவகாரத்தில் பாக்யராஜூடன் சமாதானமாக சென்றுள்ளார்.