ரெஞ்சினி குஞ்சுவை திடீரென கரம் பிடித்த நடிகர்! ரகசிய கல்யாணம்!

மலையாள நடிகர் சன்னி வெய்ன் மற்றும் அவரது நீண்டநாள் காதலியும் வருமான ரெஞ்சினி குஞ்சுவிற்கும் தற்போது திருமணம் நடந்துள்ளது.


புதன்கிழமை கோழிக்கோட்டில் யாருக்கும் தெரியாமல் தனது நண்பர்களை வைத்து  திருமணத்தை முடித்துள்ளார் நடிகர் சன்னி வெய்ன். புதன்கிழமை காலை கோழிக்கோட்டில் உள்ள குருவாயூர் கோவிலில் நண்பர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வைத்து இந்த திருமணத்தை முடித்து உள்ளார்.

 திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் திருமணம் செய்து விட்டோம் என்று புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இத்திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சன்னி வேய்னின் உண்மையான பெயர் சுஜித் உன்னிகிருஷ்ணன் என்பதாகும்.

இவருக்கு தற்போது 35 வயதாகிறது.கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வரும் இவர் ராஜுமுருகன் இயக்கி உள்ள ஜிப்ஸி என்ற படத்தில் பாலன் என்ற கேரக்டரில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.