ட்விட்டரில் அஜித்தை அவமதித்த சித்தார்த்! கொந்தளிக்கும் தல ரசிகர்கள்!

நேற்றய முன் தினம் நடைபெற்ற ஐபில் இறுதி போட்டியில் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.


இது சென்னை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.  ஏனெனில் வெற்றியின் அருகில் வரை சென்று வெல்ல முடியாமல் போய்விட்டதே என்று தான். இதனை பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு இட்டு வருகின்றனர்.  மேலும் இந்த ஐபில் போட்டி பற்றி ட்விட்டெரில் ஒருவர் கருத்து தெரிவித்தார். "

எப்படி இந்த போட்டி சொல்லி வைத்தது போல் மும்பை அணி வெற்றி பெற்றது, இந்த வெற்றி முன்பே தீர்மானிக்க பட்டதா" என்று பதிவு இட்டு இருந்தார்.இந்த பதிவை பார்த்து கடுப்பான நடிகர் சித்தார்த், அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.  "இந்த போட்டியின் வெற்றி ஒன்றும் முன்பே தீர்மானிக்க படவில்லை, இந்த வீரர்கள் நம்மை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்களது மொத்த சக்தியையும் பயன்படுத்துகிறார்கள்" என்று கூறினார். 

இதேபோல் மற்றொரு பயனர், "பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று கூறினார்", இவர் நடிகர் அஜித் -ன் புகைப்படத்தை டிபி -யாக வைத்திருந்தார். அதை பார்த்த சித்தார்த், "நீங்கள் உன்மையில் அஜித்தை மதிக்கிறீர்கள் என்றால் அடுத்தவர்களின் உழைப்பை நிச்சயம் மதீப்பீர்கள், அல்லது இது போன்ற ஒரு கூலான மனிதனை ரோல் மாடெலாகா வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை " என்று கூறினார் .

இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள், இந்த பேச்சுவார்த்தையில் அஜித்தை இழுத்தது பற்றி பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் வெறும் அஜித் என்று சொன்னதற்காக சித்தார்த்தை விமர்சித்து வருகிறார். அஜித் சார் அல்லது தல என்று கூறியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். வெறும் அஜித் என்று கூறி தங்கள் தலயை சித்தார்த் அவமதித்துவிட்டதாக அவர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.