நடிகர் செந்தில் வீட்டில் ரூ.10 லட்சம் மோசடி..! சத்யராஜை கைது செய்து போலீஸ் விசாரணை!

நடிகர் செந்தில் கரகாட்டக்காரன் படம் புகழ் துவங்கி இன்றுவரை அனைவராலும் கொண்டாடபடக்கூடிய ஒரு நகைச்சுவை நடிகர்.


அவரது அசாத்திய திறமை மற்றும் உடல் பாவனைகள், இன்றைய தலைமுறையினர் மத்தியில் மீம்ஸ் மூலமாக மிகப் பிரபலம். இந்த நிலையில் அவருக்கு தற்போது நேர்ந்துள்ள சோதனையால் அவர் காவல் நிலையம் வரை செல்ல வைத்துள்ளது. 

நடிகர் செந்தில் சாலிகிராமத்தில் தனக்கு சொந்த மான சர்வீஸ் அப்பார்ட்மெண்டை, சகாயராஜ் என்பவருக்கு, கடந்த 2013 ஆம் ஆண்டு லீஸுக்கு கொடுத்துள்ளார். 7 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட அந்த வீட்டிற்க்கு 1 அரை லட்சம் லீசு பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், சகாயராஜ் அந்த குடியிருப்பை வீட்டிற்க்கு தலா 5 முதல் 10 லட்சம் வீதமாக மேல் வாடகைக்கு விட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த நடிகர் செந்தில் இது குறித்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில், சகாயராஜ் கைது செய்யபட்டு தொடர் விசாரணை செய்யபட்டு வருகிறார்.