பேரம் படிந்தது! மீண்டும் அதிமுகவில் இணையும் பிரபல நடிகர்!

ஒரு வார காலமாக நடைபெற்ற பேரம் படிந்த நிலையில் பிரபல நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளார்.


கட்சி ஆரம்பித்தது முதல் தற்போது வரை அதிமுக கூட்டணியில் நீடிப்பது பிறகு விழுவதுமாக இருப்பவர் சரத்குமார். கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான சரத்குமார்.

ஆனால் அதன்பிறகு ஜெயலலிதாவுடன் சரத்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதிமுகவிடமிருந்து சிறிது காலம் சரத்குமார் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தென் மாவட்டங்களில் நாடார்களின் வாக்கு வங்கியை குறிவைத்து மீண்டும் சரத்குமாரை அழைத்தார் ஜெயலலிதா. இதனைத்தொடர்ந்து சரத்குமார் தோற்பார் என்று தெரிந்தே திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எதிராக அவரை களமிறங்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா நினைத்தது போலவே சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். இதன் பிறகு மீண்டும் அதிமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் சரத்குமார்.

பிறகு சசிகலா தினகரன் என ஒவ்வொருவருக்காக ஆதரவு தெரிவித்து ஒரு கட்டத்தில் தனித்துத் தேர்தலில் போட்டியிடப் போவதாக சரத்குமார் கூறிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பிரச்சாரத்திற்கு ஆள் தேவை என்கிற விளம்பரத்தை அறிந்து மீண்டும் அதிமுக தலைமையை சரத் அணுகியுள்ளார்.

ஆனால்கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற நேரத்தைத் தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சரத்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக சரத்குமார் எதிர்பார்த்த அளவிற்கு எடப்பாடி தரப்பு செட்டில்மெண்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு சரத்குமார் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.