கமலுக்கு ஆதரவு குறித்த கேள்விக்கு, என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்- போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
பாஜக தேர்தல் அறிக்கை சூப்பர்! மோடிக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் திடீர் வாய்ஸ்!

பிஜேபி நேற்று தான் தேர்தல் அறிக்கை வெளிட்டுட்டுள்ளனர். ஆனால் நான் ஏற்கனவே நதிகள் இணைப்பு குறித்து பேசி வருகிறேன். தற்போது தான் பிஜேபி நதிகள் இணைப்பு குறித்தும், அதற்காக ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். எனவே நதிகள் இணைப்பினை மேற்கொண்டால் அது மிகப்பெரிய விஷயம் என்றும், இதனால் வறுமை ஒழிப்பு குறையும் என்றும் தெரிவித்தார்- ரஜினி