ஐதராபாத்: தலைவர்168 படத்தில் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பது பற்றி ட்விட்டரில் குஷ்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன்..! பதட்டத்துடன் நடிகை குஷ்பு வெளியிட்ட தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு இதுவரை டைட்டில் வைக்கப்படாத நிலையில், தலைவர் 168 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி நடைபெற்று வ்ருகிறது. இதில், ரஜினியின் இன்ட்ரோ பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடுகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ரஜினியின் முந்தைய கால ஹீரோயின்கள் மீனா, குஷ்பு ஆகியோருடன், கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இதுபற்றி குஷ்பு மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''டிசம்பர் 21 முதல் #Thalaivar168 படத்தில் நடிக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிப்பது படபடப்பாக உள்ளது. என்னை வாழ்த்துங்கள் பிரண்ட்ஸ்,'' என எழுதியுள்ளார். இதையொட்டி பலரும் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, குஷ்பு ஜோடியாக நடித்த அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது என்பதோடு, ரஜினியின் சினிமா கேரியரில் முக்கியமான மைல்கல் படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 25 வருடங்களுக்கு பிறகு குஷ்பு ரஜினியோடு சேர்ந்துள்ளார்.