சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது இரண்டாவது மருமகனுக்கு சினிமாவில் நடிக்க பிரபல டைரக்டரிடம் சிபாரிசு செய்துள்ளார்.
முதல் மருமகன் வேண்டாம்! 2வது மருமகனை பார்த்துக்கோங்க! ரஜினி குடும்ப பஞ்சாயத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் சமீபத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தொழில் மட்டுமின்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவரை சிபாரிசு செய்வது வேறு யாரும் இல்லை அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய 'பேட்ட' இயக்கிய கார்த்திக் சுப்புராஜிடம் தான் தன்னுடைய இரண்டாவது மருமகனுக்காக சிபாரிசு செய்து வருகிறார்.
ஆனால் ரஜினியின் முதல் மருமகனை தனுசை வைத்து திரைப்படம் இயக்க கார்த்தி சுப்பராஜ் தயாராகி வந்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் அவரது 2வது மருமகனுக்கு சிபாரிசு செய்துள்ள அவரது குடும்பத்தில் பஞ்சாயத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.