சிறுவனாக இருக்கும் போது நான் கற்பழிக்கப்பட்டேன்..! பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!

ஐதராபாத்: சிறு வயதில் பாலியல் தொல்லையை சந்தித்தேன் என்று நடிகர் ராகுல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ராகுல் ராமகிருஷ்ணா உள்ளார். இவர், சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் #AlaVaikunthapurramuloo படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்து பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தார். இவர், ட்விட்டரில் ஒரு புதிய அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார்.  

அந்த ட்விட்டர் பதிவில், ''சிறு வயதில் நான் பலாத்காரம் செய்யப்பட்டேன். இதுபற்றி வேறு எதுவும் எனக்குச் சொல்ல தோன்றவில்லை. என்னை பற்றி ஆழ்ந்து யோசிக்கும் போதெல்லாம் அந்த சம்பவம்தான் நினைவிற்கு வரும். அதை நினைத்தாலே ஒவ்வொரு முறையும் வேதனையாக உள்ளது,'' என எழுதியுள்ளார். எனினும், தன்னை பலாத்காரம் செய்தது யார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. அதேசமயம், நடிகர் ராகுலுக்கு ஆறுதல் தெரிவித்து பலரும் ட்விட்டரில் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.  

வழக்கமாக பெண்கள்தான் பாலியல் ரீதியான பிரச்னைகளை சந்திப்பார்கள் என்ற நிலை காணப்படுகிறது. ஆனால், அதில் இருந்து வித்தியாசமாக, ஆண்களுக்கும் இத்தகைய பிரச்னை உள்ளது எனும் உண்மையை ராகுல் வெளிப்படுத்தியுள்ளதாக, ஒருசிலர் கமெண்ட் பகிர்வதைக் காண முடிகிறது.