அப்பா கனவை நினைவாக்கிட்டேன்! ஈழப் பெண்ணை மணந்த மணிவண்ணன் மகன்! நெகிழ வைத்த நிகழ்வு!

தமிழ் திரையுலகில் இயக்குனர், குணச்சித்திர நடிகர், வில்லன் என பல முகங்களில் கால் பதித்த மணிவண்ணனின் மகன் ஈழத்தமிழ் பெண்ணை மணந்துள்ளார்.


 நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தவர் மணிவண்ணன் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது படங்களிலும் அரசியலும் வசனங்களை பேசி இருப்பார் அதன் காரணமாக மணிவண்ணன் தனது அரசியல் ஈடுபாட்டின் காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்தார். 

நாம் தமிழர் கட்சி ஈழதமிழ்ர்களுக்காக உருவாக்கப்பட்டது. தமிழ் மற்றும் கலாசாரத்தில் நாட்டம் கொண்ட மணிவண்ணன் பல ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.

இதன் காரணமாக, மணிவண்ணன் தனது பிள்ளையை ஈழப்பெண்ணுக்கு திருமணம் செய்து வேண்டும் என்று எண்ணி உள்ளார். இந்த நிலையில், மணிவண்ணன் லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணான அபி-க்கு தனது மகன் ரகுவண்ணணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் - அபி திருமண நிச்சயம் நடைபெற்றது. மேலும், ஜூன் மாதம் திருமணம் நிச்சம் செய்தனர். ஆனால் ஜூன் மாதத்தில் நடந்த சோகம் மணிவண்ணன் மரணமடைந்தார்.

அந்த நிகழ்வை தொடர்ந்து, சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இந்த சோகத்தை அடுத்து ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது.

இந்த நிலையில், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தந்தையின் ஆசையின் படி ரகுவண்ணன் - அபி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை திருவிழாப் போல் நடத்தி கொடுத்துள்ளார் மணிவண்ணனின் நண்பரான சத்யராஜ் அவர்கள். இந்த நெகிழ்ச்சி சம்பத்தைப் பார்த்த அனைவரும் மனம் மகிழ்ந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

தந்தையின் ஆசியோடு தற்போது ரகுவண்ணன் - அபி தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் .