அது போடாமல் நடிகருடன் பைக் பயணம்! பிரபல நடிகரின் மகளை போலீஸ் தேடுகிறது!

பாலிவுட் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாக இருப்பவர்கள் சாரா அலி கான் மற்றும் கார்த்திக் ஆர்யன் ஆகிய இருவரும் தான் இந்த இருவரும் தற்போது Love Aaj Kal என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.


இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது .

சமீபத்தில் இருவரும் லிப்லாக் அடித்தது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

 இந்த வீடியோவில் கார்த்திக் ஆரியன் ஹெல்மெட் அணிந்து உள்ளார். ஆனால் பின்னால் உட்கார்ந்து உள்ள சாரா அலி கான் ஹெல்மெட் அணியவில்லை. இதனை பார்த்த ட்விட்டர்வாசிகள் இருவரையும் கடுமையாக விமர்சித்த தோடு ட்விட்டரில் டெல்லி போலீசியடம் டேக் செய்து புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சென்ற வண்டியின் எண்ணையும் பதிவு செய்து இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.