கமலுடன் மேலும் ஒரு கட்சி கூட்டணி! 2 தொகுதி ஒதுக்கீடு! யார்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி சேர்ந்து உள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கனவே இந்திய குடியரசு கட்சியுடன் நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதியில் இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியும் ஒதுக்கியுள்ளார் கமல்.

இந்தியக் குடியரசுக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் திடீரென மேலும் ஒரு கட்சியை நடிகர் கமல் தனது கூட்டணியில் இணைந்துள்ளார்.

ஆனால் அந்தக் கட்சி எந்தக் கட்சி என்று மக்கள் நீதி மையத்தில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. ஆம் வளரும் தமிழகம் கட்சி என்கிற ஒரு கட்சி தான் கமலுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளது.

இதுவரை இப்படி ஒரு கட்சி பெயரை யாருமே கேள்விப்படாத நிலையில் அந்தக் கட்சிக்கு இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகள் ஒதுக்குவதாகக் மக்கள் நீதி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் என்று கூறி துரையரசன் என்பவருடன் கமல் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தும் வெளியிட்டுள்ளார்.

இது போக இன்னும் கமல் எந்தெந்த கட்சிகள் எல்லாம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப் போகிறார் என்கிற ரீதியில் மக்கள் நீதி மையம் கட்சியினர் அமர்ந்துள்ளனர்.