மச்சினிச்சி சவுந்தர்யாவுக்கு நடிகர் தனுஷ் கொடுத்த திருமண பரிசு!

ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நடிகர் தனுஷ் வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளார்.


ரஜினிகாந்தின் இளைய மகனான சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வினை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் இருக்கும் நிலையில் சௌந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வஞ்சகர் உலகம் என்ற திரைப்படத்தில் நடித்த விசாகன் வணங்காமுடிக்கும் சௌந்தர்யாவுக்கும் கடந்த 11ஆம் தேதி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது

 

இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டனர். முக்கிய பிரமுகர்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். தற்போது சௌந்தர்யா தனது கணவர் விசாகன் உடன் ஐஸ்லாந்தில் தேனிலவை கொண்டாடி வருகிறார்

 

இதனிடையே அவர்களது திருமணத்தில் நடைபெற்ற பல சுவாரசிய சம்பவங்கள் தற்போது வெளிவந்துள்ளது. திருமணத்திற்கு முன் தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அந்தக் கொண்டாட்டத்தின் போது அவர் தான் நடித்த முத்து என்ற பாடலில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடினார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியதுஇந்தநிலையில் திருமணத்தன்று மற்றொரு ருசிகரம் நிகழ்ந்துள்ளதுரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் உற்சாகமாக ஆட்டம் போட்டுள்ளார். தனது நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடலுக்கு தனுஷ் கலக்கலான ஆட்டம் போட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

அவர் மட்டுமல்லாது ரஜினியின் குடும்பத்தினர் அனைவருமே இந்த பாடலுக்கு ஆடியுள்ளனர். பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையே சௌந்தர்யா - விசாகன் திருமணம் நடைபெற்றுள்ளதுமச்சினிச்சிக்கு தனது திருமண பரிசாக அந்த ஆட்டத்தை அர்ப்பணிப்பதாக அப்போது தனுஷ் கூறியுள்ளார்.