பாகுபலி பிரபாஸ் நடிகை அனுஷ்காவை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் காதலிப்பது வேறு ஒரு நடிகை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி பிரபாஸ் காதலிப்பது அனுஷ்கா இல்லையாம்! அப்ப எந்த நடிகை தெரியுமா?

பாகுபலி படத்தில்
இணைந்து நடித்த பிரபாஸ் – அனுஷ்கா இடையே காதல் மலர்ந்ததாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே
பேசப்பட்டு வருகிறது. பிரபாஸ் – அனுஷ்கா தங்கள் காதலை மறைத்தாலும் விரைவில் அவர்கள்
திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வரும். ஆனால் தான் அனுஷ்காவை
காதலிக்கவில்லை என்று நடிகர் பிரபாஸ் வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஆனால் இப்படி வெளிப்படையாக
கூறாமல் அனுஷ்கா மவுனம் காத்து வருகிறார்.
இதனால் தான் அவர்கள்
இருவரையும் தொடர்புபடுத்தி அவ்வப்போது வதந்திகள் வரும். இந்த நிலையில் தற்போது புதிதாக
ஒரு கிசுகிசு தெலுங்கு திரையுலகில் பரவி வருகிறது. அது என்ன என்றால், நடிகர் பிரபாஸ்
திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும், பெண்ணையும் அவர் தேர்வு செய்துவிட்டதாகவும், அந்த
பெண்ணின் சம்மதத்திற்காக பிரபாஸ் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த பெண் யார் என்று
விசாரித்த போது தான், அது நடிகை காஜல் அகர்வால் என்று தெரியவந்துள்ளதாக கிசுகிசுக்கள்
வெளியாகியுள்ளன. டார்லிங் எனும் படத்தில் சேர்ந்து நடித்த போதே பிரபாஸ் நடிகை காஜல்
மேல் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதே பிரபாஸ் தனது காதலை காஜலிடம் கூறியதாகவும்
அது குறித்து முடிவெடுக்க தனக்கு நேரம் தேவை என காஜல் பதில் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதனை மனதில் கொண்டே
காஜலின் பதிலுக்காக பிரபாஸ் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. காஜல் ஓ.கே. சொல்லிவிட்டால் அடுத்த முகூர்த்தத்திலேயே
பிரபாஸ் காஜலை திருமணம் செய்து கொள்வார் என்று பேசப்படுகிறது. வழக்கம் போல் இந்த தகவல்
குறித்தும் பிரபாஸ் மற்றும காஜல் மவுனம் காத்து வருகின்றனர்.