மாமன்னன் பிரித்விராஜின் கதை திரைப்படமாகிறது! ஹீரோ யார் தெரியுமா?

தனது பிறந்த நாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்டு இந்தி திரையுலக ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளார் அக்ஷய் குமார்.


இந்தி திரையுலகில் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் பற்றி தெரியாத ரசிகர்ளே பாலிவுட்டில் இல்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அக்ஷய்குமார் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தபிறகுதான் அவரை பற்றி பெரும்பாலான சினிமா ரசிர்களுக்கு தெரியும் என்றே கூறலாம். 2.0 படம் வெற்றிகரமாக ஓடியதை அடுத்து தமிழ் மக்களுக்கும் அக்ஷய் குமாரின் முகம் மனதில் பதிந்து விட்டது.  

இந்நிலையில் மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் படத்தில் அக்ஷய் குமார் நடிக்கத் தொடங்கி உள்ளார். டெல்லியில் ஆட்சி புரிந்த பிருத்வி ராஜ் சவுகான். கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் கொண்ட காதல் புகழ்பெற்ற காதல் கதையாகும்.

ஆயிரம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபுவின் கருணை உள்ளம் பிருத்விராஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிக்கிறார் அக்ஷய் குமார். தான் பிருத்விராஜ் படத்தில் நடிப்பதாக தனது பிறந்த நாளில் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் அக்ஷய் குமார். இந்த பதிவை பார்த்து ஏராளமான ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தனர்.

வரலாற்று கதை என்பதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகும். எனவே அடுத்த வருடம் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் அக்ஷய் நடித்த மிஷன் மங்கள் திரைப்படம் வெற்றி பெற்றது. போர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் அக்ஷய் குமார் என்பது கூடுதல் தகவல்.